News October 18, 2025
திருவாரூர்: குட்கா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது!

நீடாமங்கலம் சித்தமல்லி பகுதியில் 13 மூட்டைகளில் சுமார் 300 கிலோ எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மொத்த விற்பனைக்கு வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டு, ஆதனூர் மண்டபம் சுரேஷ் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுமட்டும் அல்லாது, மாவட்ட எஸ்.பி கருண் கரட் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டதை அடுத்து, சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 18, 2025
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News October 18, 2025
திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. குறிப்பாக அவசர சிகிச்சை டெக்னீசியன், மயக்க மருந்து டெக்னீசியன், அவசர சிகிச்சை அரங்க டெக்னீசியன், உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர 14-11-2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உதவி திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
திருவாரூர்: அரசு கல்லூரியில் கலை திருவிழா

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலை திருவிழா முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கலைத் திருவிழா போட்டிகளில் கல்லூரி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ-மாணவியருக்கு நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வருனணையாளர் போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.