News April 17, 2024
தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தேனி,தமிழக கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் ஒருமுறை சித்ரா பெளர்ணமியன்று நடைபெறும் திருவிழாவிற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி ஏப்.23 இல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு ஏப்.23இல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே.4 பணிநாள் எனவும் அறிவிப்பு.
Similar News
News November 4, 2025
சின்னமனூரில் மின்தடை ரத்து

நாளை (05.11.2025) பராமரிப்பு பணி காரணமாக 110 KV மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மேற்கண்ட பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்கும் என மின்செயற்பொறியாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
தேனி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

தேனி மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News November 4, 2025
தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04546262112 அணுகலாம். SHARE பண்ணுங்க


