News October 18, 2025

கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.18) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மின்னல் தாக்கும் நேரங்களில் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது. SHARE NOW!

Similar News

News December 7, 2025

கடலூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

கடலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<> இங்கே க்ளிக்<<>> செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

News December 7, 2025

கடலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 7, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 7) காலை 8:30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 4 மில்லி மீட்டர், சிதம்பரம் 1.1 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 1 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.5 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 6.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!