News October 18, 2025
இதுதான் இந்தியாவின் பிளேயிங் XI?

நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ODI-ல் களமிறங்கவுள்ள இந்திய பிளேயிங் XI-ஐ முன்னாள் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்திய அணி: கில் (கேப்டன்), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ். இந்த டீம் பந்தயம் அடிக்குமா? நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-ஐ கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 19, 2025
சாப்பிட்ட உடனே வாக்கிங் செல்லலாமா?

சாப்பிட்ட பின் நடப்பது உடல்நலத்துக்கு நல்லது தான். ஆனால், சாப்பிட்ட உடனேயே அதை செய்ய வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள். சாப்பிட்டவுடன் நடப்பது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். அதனால் சாப்பிட்டு குறைந்தது 10 – 15 நிமிடத்துக்கு பின் நடக்கலாம். 30 நிமிடத்துக்கு பின் வாக்கிங் செல்வது ஜீரணத்தை மேம்படுத்துவதுடன் உடல்பருமனை குறைக்கவும் உதவுமாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News October 19, 2025
சாபத்தால் தீபாவளி கொண்டாடாத கிராமம்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சலின் சம்மூ கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் தீபாவளியை கொண்டாட தயாரானார். அப்போது இறந்த அவளது கணவரின் உடல் வீட்டிற்கு வர, உடன்கட்டை ஏறினாள். அதற்கு முன்பு, ‘இந்த ஊர் மக்கள் தீபாவளியை கொண்டாடவே முடியாது’ என சாபமிட்டாள். இதன் பிறகு தீபாவளி கொண்டாடியபோதெல்லாம் இறப்பு (அ) பேரழிவு ஏற்பட்டுள்ளது. சாபத்தாலேயே இவ்வாறு நடப்பதாக, இதுவரை அவர்கள் தீபாவளி கொண்டாடவில்லை.
News October 19, 2025
ராசி பலன்கள் (19.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.