News October 18, 2025
செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை

மறைமலை நகர் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவேந்திரன், கிருஷ்ணவேணி, தம்பதி. இவர்களது வீட்டில் நேற்று (அக்.17) காலை யாரும் இல்லாத போது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
Similar News
News December 7, 2025
செங்கல்பட்டு: முதியவரிடம் கோடி கணக்கில் மோசடி 3 பேர் கைது

தாம்பரத்தைச் சேர்ந்த 62 வயது சந்திரன் என்பவரிடம், ‘வங்கி கணக்கு மோசடி, டெல்லி போலீஸ் வழக்கு, டிஜிட்டல் கைது’ எனக் கூறி மிரட்டி ரூ.2.25 கோடியை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இது தொடர்பாக, ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மேலும் 3 பேர் (அக்ஷய் சுந்தர் ராவ், நஜ்ருல் அலி, மொபரோக் ஹூசைன்) கைது செய்யப்பட்டனர். சந்திரனிடம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.
News December 7, 2025
செங்கல்பட்டு: இன்றைய ரோந்துக் காவல் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.