News October 18, 2025

விருதுநகர்: ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!

image

திருச்சுழி உடையனேந்தலை சேர்ந்தவர் மதிதயன். காரில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று கல்குறிச்சியில் விற்பனை செய்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உடையனேந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. கார் தீயில் கடும் சேதமடைந்தது.

Similar News

News December 8, 2025

மீண்டும் ஆட்சியர் தலைமையில் காப்பி வித் கலெக்டர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காபி வித் கலெக்டர் (Coffee With Collector) என்ற 209- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள்(தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) கீழ் மீட்கப்பட்ட 11 வளரிளம் பருவ தொழிலாளர்களுடன் ஆட்சியர் சுகபுத்ரா கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

News December 8, 2025

விருதுநகரில் டைடல் நியோ பூங்கா – ஸ்டாலின் அறிவிப்பு

image

மதுரையில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில், மதுரை மாவட்டத்தில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் சிவகங்கை மாவட்டத்திலும் டைடல் நியோ பூங்கா நிறுவப்பட்டு வரும் நிலையில் விருதுநகர், நெல்லை மற்றும் குமரி ஆகிய தென்மாவட்டங்களிலும் டைடல் நியோ பூங்காக்கள் நிறுவ திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

News December 8, 2025

விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

error: Content is protected !!