News October 18, 2025
மலையாள படத்தின் ரீமேக்கா ‘ஜனநாயகன்’?

பாலய்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ‘ஜனாதிபதியம்’ என்ற மலையாள படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியான விஜய், சந்தர்ப்ப சூழலால் அரசியலுக்கு சென்று, CM ஆவதுதான் கதை என்கிறார்கள். எது எப்படியோ, விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு ஹெவியாக இருக்கிறது.
Similar News
News October 18, 2025
‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி கூட்டம்

அக்.28-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட மத்திய பாஜக அரசின் முன்பு தமிழ்நாடு தலைகுனியாது. மேலும், 2026 தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
சூர்யா படத்தில் பகத் பாசில்?

இந்திய அளவில் தற்போது பிரபலமான மலையாள நடிகர் என்றால் அது பகத் பாசில்தான். தனது நடிப்பாற்றலால், பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ள அவர், சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47-ல் அவரை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். முன்னதாக, ஜீத்து மாதவன்தான் பகத்தின் ‘ஆவேசம்’ படத்தை இயக்கி இருந்தார்.
News October 18, 2025
BREAKING: தலா ₹20 லட்சம் வழங்கினார் விஜய்

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, விஜய் தரப்பில் தலா ₹20 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 41 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.