News October 18, 2025
நாமக்கல் அருகே சாலை விபத்து: ஒருவர் பலி

தாத்தயங்கர்பட்டி பில்லா துறையை சேர்ந்த வைரமாணிக்கம், 45. இவர் இரவு, நாமக்கல் சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து விட்டு, டூவீலரில் பொட்டிரெட்டிபட்டி அரசு பள்ளி அருகே சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதானால், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
ஆஞ்சநேயர் பக்தர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தினசரி கட்டளைதாரர்கள் மூலம் வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சிறப்பு அபிஷேகத்திற்கான முன்பதிவு கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
News December 7, 2025
பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்!

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள பாரில் அனுமதி இல்லாமல் விதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்த வீதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய் துகொண்டிருந்த கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் (50), என்பவரை போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், தலைமறை வாக உள்ள, ‘பார்’ உரிமையாளர் கார்த்தி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
News December 7, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


