News April 17, 2024

தமிழகத்தில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள்

image

தமிழகம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் கூடுதலாக போலீஸாரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

Similar News

News November 15, 2025

ஜாமின் நிபந்தனையில் தளர்வு கோரி செந்தில் பாலாஜி மனு

image

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் SC-ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ED இயக்குநர் முன் கடந்த 12 மாதங்களில் 116 முறை நேரில் ஆஜரானதாகவும், அதனை கருத்தில் கொண்டு ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ED பதில் அளிக்க SC உத்தரவிட்டுள்ளது.

News November 15, 2025

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?

image

‘ரஜினி 174’ படத்தில் இருந்து <<18275475>>சுந்தர் சி<<>> வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஒரு ஜாலியான பேய் கதையை சுந்தர் சி கூறியுள்ளாராம். கதை பிடித்துபோன ரஜினி, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி கூறியிருக்கிறாராம். மாற்றங்களை செய்தாலும், அடிக்கடி கரெக்‌ஷன் சொன்னதால் கடுப்பான சுந்தர் சி, யாரிடமும் சொல்லாமல், படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டாராம்.

News November 15, 2025

பிஹார் தேர்தல்: முழு ரிசல்ட் இதோ..

image

பிஹாரின் 243 தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக 89, JD(U) 85 என NDA கூட்டணி மொத்தம் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. RJD 25, காங்கிரஸ் 6 என MGB கூட்டணி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட 15 தொகுதிகளில் கூடுதலாக வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல், கடந்த தேர்தலை விட RJD 50, காங்கிரஸ் 13 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது.

error: Content is protected !!