News October 18, 2025
Business Roundup: 3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்

*லாக்கர் வாடகை கட்டணத்தை பஞ்சாப் தேசிய வங்கி குறைத்துள்ளது. *இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகின. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ₹88.03-ஆக உள்ளன. *சர்வதேச ரயில் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம். *அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய கூடுதல் முக்கியத்துவம்.
Similar News
News October 18, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹2,000 குறைந்தது. இந்நிலையில், மாலையில் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சவரன் ₹400 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹12,000-க்கும், 1 சவரன் ₹96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ₹190-க்கு விற்கப்படுகிறது.
News October 18, 2025
இந்த பழங்களை மழை காலத்தில் சாப்பிடாதீங்க!

பருவ மழை காலம், மழையை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே பலவித தொற்றுநோய்களையும் கொண்டு வரும். மழைக்கால ஈரப்பதம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, சில பழங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி நீங்கள் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன என்று மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…
News October 18, 2025
அவைக்குறிப்பில் தீபாவளி வாழ்த்து நீக்கம்: வானதி

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து கூற மறுத்தவர்கள், ‘தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்’ என்று கேட்கக்கூட அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தீபாவளி வாழ்த்து கூறுங்கள் என்று பேசியதை கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர் என்றார். இதைவிட பாசிசம் வேறேதும் இருக்க முடியாது என்றும் விமர்சித்தார். திமுக தரப்பில் தீபாவளி வாழ்த்து கூறாதது தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.