News October 18, 2025
50 கோடி கஸ்டமர்கள்.. ₹7,379 லாபம் ஈட்டிய ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நடப்பாண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU) மாதத்திற்கு ₹211.4-ஆகவும், ஜியோ பிளாட்ஃபார்ம்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12.8% அதிகரித்து ₹7,379 கோடியாகவும் உள்ளது.
Similar News
News October 18, 2025
தீபாவளியும் புது டிரெஸ்ஸும்..

இப்போ போரடிச்சா ஷாப்பிங் போய், துணி வாங்குறோம். ஆனா, ஒரு காலத்துல தீபாவளி, பொங்கல் வந்தா மட்டும்தான் புது துணி. அதுக்காக வருஷமெல்லாம் வெயிட்டிங்கில் இருப்போம். வளருற பசங்களா இருந்தா அந்த துணியும் கொஞ்சம் லூசா தான் கிடைக்கும். தீபாவளிக்கு 2 நாள் முன்ன வீட்டுக்கு டிரெஸ் வந்தாலும், அத போட்டு பாக்க முடியாது. தொட்டு பாத்துட்டே உக்கார்ந்துட்டு இருக்கணும். உங்க வாழ்க்கை’ல மறக்க முடியாத தீபாவளி எது, ஏன்?
News October 18, 2025
வரலாற்று சாதனை இந்தியாவில் ₹8,97,000 கோடி தங்கம்!

இந்தியா முதல்முறையாக $100 பில்லியன் டாலர் தங்க கையிருப்பை தாண்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, சரியாக குறிப்பிட்டால் தற்போது ₹8,97,000 கோடி தங்க கையிருப்பு உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி கையிருப்பு மதிப்பு மேலும் உயரும் எனவும் நிபுணர்கள் கணிக்கின்றனர். மேலும், ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பில் இது 14.7% ஆகும்.
News October 18, 2025
ரோஹித்துடன் சண்டையா? சுப்மன் கில் ஓபன் டாக்

கேப்டன் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து, கில் மீது ரோஹித் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தாங்கள் எப்போதும் போலவே தற்போதும் பழகி வருவதாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ரோஹித் அனுபவசாலி என்றும் பல விஷயங்களில் அவரிடம் தான் அறிவுரை கேட்பதாகவும் தெரிவித்தார். இந்திய அணிக்கு கேப்டனாக கில் தேர்வு செய்யப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீங்க?