News October 18, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் ஏமாற்றம்

image

*டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில், ஆடவர் இரட்டையரில் சாத்விக், சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் லக்‌ஷயா சென் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 51-49 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.

Similar News

News October 18, 2025

ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க!

image

மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு நடைபயிற்சி என்பது பெரிதும் உதவும்◆2 நிமிடங்கள் நடந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும் ◆10 -15 நிமிடங்கள் நடந்தால், மன அழுத்தம் குறையும் ◆30 நிமிடங்கள் நடந்தால், உடலின் கொழுப்பு கரையும் ◆45 நிமிடங்கள் நடந்தால், எதிர்மறை எண்ணங்கள் குறைந்து, நிம்மதி அடைவீர்கள் ◆60 நிமிடங்கள் நடந்தால், டோபமைன் சுரந்து மனதில் சந்தோஷம் கூடும். ட்ரை பண்ணி பாருங்க. SHARE IT.

News October 18, 2025

திராவிடத்திற்கும் EPS-க்கும் சம்பந்தமில்லை: சிவசங்கர்

image

திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாது என கூறிய EPS, திராவிட மாடலுக்கு நான் தான் உதாரணம் என்று சொல்வது கேவலமான கூத்து என SS சிவசங்கர் விமர்சித்துள்ளார். EPS-ஐ பொறுத்தவரை கட்சி, கொள்கை என்று எதுவுமே கிடையாது, அமித்ஷா திமுக என்ற நிலைக்கு அதிமுக சென்றுவிட்டதாகவும் சாடினார். அதிமுக எனும் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தும் EPS-க்கும் திராவிடத்துக்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டார்.

News October 18, 2025

நடிகை சமந்தா எக்கர் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகை சமந்தா எக்கர் (86) காலமானார். இவர் 3 முறை ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. The Brood, Doctor Dolittle, The Exterminator, The Dead Are Alive, Star Trek: The Next Generation, The Phantom உள்ளிட்டவை இவர் நடித்த படங்களில் முக்கியமானவை. இவர் அதிகம் ஹாரர் படங்களில் நடித்துள்ளார். RIP

error: Content is protected !!