News October 18, 2025
சங்கரன்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் அக்டோபர் 2025 இன் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2025 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்திற்கு சங்கரன்கோவில் வருவாய் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News October 18, 2025
தென்காசி: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

தென்காசி மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..
News October 18, 2025
தென்காசி: வெள்ளம் பாதிப்புகள் புகார் எண்கள்!

தென்காசியில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 18, 2025
திருப்பூர் அடுத்து தென்காசி? – படையெடுக்கும் வடமாநிலம்!

அமெரிக்க வரியால் திருப்பூர் ஆடை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இதனால், வேலை இழந்த வடமாநில இளைஞர்கள் பலர் சொந்த ஊர் திரும்புகின்றனர். சிலர் தென்காசி மாவட்டத்தில் நாற்று நடவு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தென்காசியில் உள்ள பணியாளர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது.