News October 18, 2025
ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பண மோசடி – காவல்துறை

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டு இருக்கும் செய்தி தொகுப்பு தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனைகள் நடைபெற்று வருவதாகவும், அப்படி நடைபெறும் ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பண மோசடிகள் நடைபெறுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் பட்டாசு வாங்கும் போது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 18, 2025
நெல்லை: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

நெல்லை இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <
News October 18, 2025
தலைமறைவாக இருந்த குற்றவாளி மகாரஷ்டிராவில் கைது

மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா சேத்வால்(54) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 1 வருடம் 3மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீஸ் மகாராஷ்டிராவில் கைது செய்து இன்று நெல்லை அழைத்து வந்தனர்.
News October 18, 2025
நெல்லை: தீபாவளி ஒட்டி 1600 போலீசார் பாதுகாப்பு – எஸ்பி

தீபாவளிக்காக ஏஎஸ்பி டிஎஸ்பிக்கள் தலைமையில் 1600 போலீசார் மாவட்டம் முழுவதும் பணியில் உள்ளனர். அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்களில் 24 மணி
நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். 53 இடங்களில் வாகன சோதனைகள் மூலம் சந்தேகமான நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.