News October 18, 2025
உதகை ஆங்கில பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர் மோப்ப நாயுடன் விரைந்து சென்று பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு புரளி என தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
நீலகிரி: நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, சுப்பிரமணிய கவுசிக் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்துவது குறித்து நவ. 21ம் தேதிக்குள் நிறுவனங்களுடன் கலந்தலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News October 18, 2025
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலார்ட்: மக்களே உஷார்!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் ஆலார்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 18, 2025
நீலகிரி மக்களே எச்சரிக்கை அறிவிப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான நீலகிரி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.