News October 18, 2025
அமைச்சர் குடுகுடுப்பைக்காரன் போல் பேசக்கூடாது: அன்புமணி

TRB ராஜா அமைச்சரை போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என அன்புமணி விமர்சித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்ததுபோல், முதலீடுகள் கண்டிப்பாக வரும் என மீண்டும் மீண்டும் சொல்லும் ராஜா, அது எப்போது வருமென சொல்லவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும் மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல், உண்மையாகவே முதலீடுகளை ஈர்க்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Similar News
News October 18, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹13,000 குறைந்தது

<<18038727>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக் கொண்டு உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹13,000 குறைந்துள்ளது. இதனால், 1 கிராம் 190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ 1,90,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ₹161-க்கு விற்பனையான நிலையில், கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத உச்சமாக ₹207-ஐ தொட்டது. இதனால், பலரும் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வந்தனர்.
News October 18, 2025
பவன் கல்யாணை இயக்கும் லோகேஷ்?

‘ஜனநாயகன்’, யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ படங்களை தயாரிக்கும் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக பவன் கல்யாணை ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். அந்த பட்டியலில் லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் ஆகியோர் இருக்கிறார்களாம். இவர்கள் இருவரில் யாராவது ஒருவர்தான் பவன் கல்யாண் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 18, 2025
யாரை ஏமாற்றுகிறார் CM ஸ்டாலின்? அண்ணாமலை

ஆணவப்படுகொலையை தடுக்க ஆணையம் அமைத்து யாரை ஏமாற்றுகிறார் CM ஸ்டாலின் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியல் & பழங்குடி சமூகத்தினர் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாக தெரியவில்லை எனவும் ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை CM வீணடிக்கிறார் எனவும் சாடியுள்ளார்.