News October 17, 2025

ஒரே இளைஞரை திருமணம் செய்த 2 பெண்கள்❤️❤️

image

கர்நாடகாவில் ஒரே மேடையில் 2 பெண்களை இளைஞர் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் வசிம் ஷேக்குடன்(25) சிறுவயதில் இருந்தே ஷிஃபா, ஜனத் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். வசிமை பிரிய மனமில்லாமல் இருந்த இருவரும், அவரையே திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, குடும்பத்தினர் சம்மதத்துடன் ஒரே மேடையில் இருவரையும் வசிம் கரம்பிடித்தார்.

Similar News

News December 7, 2025

லோகியின் அடுத்த குக்கிங்.. ஆமிர் கான் அப்டேட்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில், தான் லோகேஷுடன் பேசி வருவதை ஆமிர் உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு லோகியுடன் பேசியதாகவும், விரைவில் மும்பையில் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை தற்காலிகமாக லோகியின் டைரக்‌ஷனில் கமிட்டாகியுள்ளதாக ஆமிர் ஹிண்ட் கொடுத்துள்ளார். லோகேஷ் – ஆமிர் காம்போ எப்படி இருக்கும்?

News December 7, 2025

அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது: DCM

image

அமித்ஷாவுக்கு எதிராக எந்த கருத்தும் கூறமுடியாத நிலைக்கு EPS தள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். அதிமுக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்ற அவர், அது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை; சொல்லப்போனால் அதிமுகவே இல்லை எனவும் சாடியுள்ளார்.

News December 7, 2025

உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

image

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!