News October 17, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ₹1,000 கிடைப்பதில் சிக்கல் வரும். SHARE IT.
Similar News
News October 18, 2025
தீபாவளி ரிலீஸ்: வசூல் சாதனை படைத்த படம்

தீபாவளி விருந்தாக தமிழில் 3 படங்கள் வெளிவந்துள்ளன. இதில், ₹30 கோடி பட்ஜெட்டில் உருவான ‘டியூட்’ படம் முதல் நாளில் ₹10+ கோடி வசூல் சாதனை செய்துள்ளது. அதே நேரத்தில், நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘பைசன்’ படம் ₹5+ கோடியும், ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படம் ₹1+ கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த மூன்று படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?
News October 18, 2025
இந்த HeadPhone-களின் விலையை கேட்டா தலை சுத்தும்!

பாட்டு கேட்க ஒரு ஹெட்போன் இருந்தால் போதும் என்ற காலகட்டம் மாறி, தற்போது Fashion Statement ஆகவும், பொருளாதார அந்தஸ்தாகவும் ஆகிவிட்டது ஹெட்போன்கள். இதனாலேயே, லட்சக்கணக்கில் காசை வாரி இறைத்து ஹெட்போன் வாங்க சிலர் தயாராக இருக்கின்றனர். அப்படி உலகிலேயே சிலர் மட்டும் பயன்படுத்தும் டாப் 5 எக்ஸ்பென்சிவ் ஹெட்போன்களை அறிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. நீங்கள் பயன்படுத்தும் ஹெட்போனின் விலை என்ன?
News October 18, 2025
விஜய் உடன் கூட்டணியா? முக்கிய ஆலோசனை

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறார். NDA-வில் இருந்து அவர் விலகிய பின்னர், விஜய் உடன் கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, TVK கூட்டணி தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினாராம். மேலும், ஜன.7-ல் மதுரை மாநாட்டிற்கு முன்னதாக கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.