News October 17, 2025

தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

image

தீபாவளிக்கு அடுத்த நாளான அக்.21-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, சனி, ஞாயிறு உள்பட தீபாவளிக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாக இருந்தது. தற்போது, அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக அக்.25(சனிக்கிழமை) வேலை நாள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Similar News

News October 18, 2025

உருட்டுக் கடை திமுக Vs அதிமுகவை திருடிய இபிஎஸ்

image

அதிமுகவை திருட்டுத்தனமாக கைப்பற்றிவிட்டு திமுகவை குறை சொல்லலாமா என இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். முதல்வரை விமர்சிப்பதாக நினைத்து அல்வா இல்லாத பஞ்சு பாக்கெட்டுகளை கொடுத்து திருட்டு அல்வா கொடுத்ததாகவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, 2021-ம் ஆண்டு தீபாவளியின்போது 525 வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக அதில் 10% கூட நிறைவேற்றாமல் <<18031093>>உருட்டுவதாக கூறி அல்வா<<>> பாக்கெட் வழங்கியிருந்தார்.

News October 18, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.18) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,000 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹250 குறைந்து ₹11,950-க்கும், சவரன் ₹95,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில், இன்று தலைகீழாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 18, 2025

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியாது போலவே!

image

தீபாவளி நாளான அக்.20-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், அன்றைய தினம் இந்த மாவட்டங்களில் பட்டாசு வெடிப்பது கஷ்டம் தான். உங்கள் ஊரில் மழை பெய்யுதா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!