News October 17, 2025
ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் போராட்டம்

அம்பரிஷிபுரம் ஊராட்சி ஜடேரி அருந்ததி பாளையம் பகுதியில் டாஸ்மாக் அரசு மது கடை இயங்கி வந்தது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் இன்று அக்டோபர் 17ம் தேதி கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைதொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் கடையில் இருந்த அனைத்து மது பாட்டில்களும் வேறு கடைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Similar News
News October 18, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில்,<
News October 18, 2025
ராணிப்பேட்டை: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள்<
News October 18, 2025
ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (அக்.17) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் மாத அரிசியை, ரேஷன் கடைகளில் வாங்க இயலாதவர்கள் அக்டோபர் மாதமே பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம் நவம்பர் மாதம் வாங்க விரும்பினாலும் அந்த மாதம் வாங்கலாம். மேலும் அரிசி மட்டுமே இப்படி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.