News October 17, 2025
₹21 லட்சத்துக்கு Free ஆக உணவு சாப்பிட்ட நபர்!

ஜப்பானில் ஒருவர் உணவு ஆர்டர் செயலியை ஏமாற்றி கடந்த 2 ஆண்டுகளாக ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்டுள்ளார். செயலியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என புகார் கொடுப்பதை நம்பி, செயலியும் பணத்தை திருப்பி கொடுத்து, உணவையும் அளித்து வந்துள்ளது. 124 போலி சிம் கார்டு மூலம் 1,095 முறை அவர் உணவை சாப்பிட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் செய்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News October 18, 2025
வெண்ணிலவாய் பளபளக்கும் வாணி போஜன்

சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் மின்னி வருகிறார் நடிகை வாணி போஜன். இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், தனது தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வெண்ணிற உடையில் மின்மினியாய் மின்னும் அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி தெளித்து வருகின்றனர். சீரியலில் நடித்த போதே சின்னத்திரை நயன்தாரா என வர்ணிக்கப்பட்ட அவரது புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.
News October 18, 2025
லாக்கர் சேவை: கட்டணத்தை குறைத்தது தேசிய வங்கி

பஞ்சாப் தேசிய வங்கி, லாக்கர் சேவைக்கான வாடகை கட்டணத்தை குறைத்துள்ளது. *.ஊரக பகுதிகள்: சிறிய லாக்கர் – ₹750 (முன்பு ₹1000), நடுத்தர லாக்கர் – ₹1,900 (முன்பு ₹2,500). *2-ம் தர நகரங்கள்: சிறிய லாக்கர் – ₹1,150 (முன்பு ₹1,500), நடுத்தர லாக்கர் – ₹2,250 (முன்பு ₹3,000). *மெட்ரோ நகரங்கள்: சிறிய லாக்கர் – ₹1,500 (முன்பு 2,000), நடுத்தர லாக்கர் – ₹3,000 (முன்பு 4,000).
News October 18, 2025
சாதிக்காக கொல்லாமல் சாதியை கொல்லுங்கள்: சீமான்

விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால்தான், ஆணவக் கொலைகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். சாதிக்காக கொலை செய்யாமல், சாதியை கொலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுத்ததாகவும், ஆனால், இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.