News October 17, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக முன் பின் தெரியாத எண்களிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகள் வந்தால் ஏற்கவோ அல்லது குறுஞ்செய்திகளில் பெறப்படும் OTP- யை கூறவோ வேண்டாம். மோசடிக்காரர்கள் (SCAMMERS) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, OTP அனுப்பி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 18, 2025

திருவாரூர்: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

image

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

News October 18, 2025

திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு!

image

திருவாரூர் மாவட்டம் முழுவதுமே கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், மன்னார்குடி, கொரடாச்சேரி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 251.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2025

திருவாரூர்: குட்கா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது!

image

நீடாமங்கலம் சித்தமல்லி பகுதியில் 13 மூட்டைகளில் சுமார் 300 கிலோ எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மொத்த விற்பனைக்கு வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டு, ஆதனூர் மண்டபம் சுரேஷ்  (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுமட்டும் அல்லாது, மாவட்ட எஸ்.பி கருண் கரட் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டதை அடுத்து, சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!