News October 17, 2025
மயிலாடுதுறை: விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை: ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கலெக்டர்

சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News October 18, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல் சிறப்பு பருவ பயிருக்கு காப்பீட்டை நவம்பர் 15-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது www.pmfby.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News October 18, 2025
மயிலாடுதுறை மக்களே உஷாரா இருங்க!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.