News October 17, 2025
ஜப்பானின் Ex. பிரதமர் முராயமா காலமானார்!

ஜப்பானின் Ex. பிரதமர் டோமிச்சி முராயமா(101) உடல்நலக் குறைவால் காலமானார். 2-ம் உலக போரில் ஜப்பான் சரணடைந்த 50-வது ஆண்டு தினத்தில் பேசிய அவர், போரின் போது ஜப்பான், ஆசிய நாடுகளுக்கு பெரிய பாதிப்புகளை உண்டாக்கியதற்கு மிகவும் வருந்துவதாக கூறினார். 1995-ல் பேசிய இவரின் உரை உலகளவில் கவனம் ஈர்த்தது. 1994-96 வரை ஜப்பானின் பிரதமராக இருந்த முராயமாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
நீதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்ரீதர் வேம்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில் நீதிபதியின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதற்காக அவரை குறிவைப்பது சரியல்ல என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது மிரட்டலுக்கான அப்பட்டமான முயற்சி என்றும், இதை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 11, 2025
தவெகவில் வைத்திலிங்கம் இணைய மாட்டார்: டிடிவி

உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான உடனே, தவெகவில் இணைய ஆசைப்படுகிறீர்களா என தொலைபேசியில் அழைத்து அவரிடம் கேட்டேன். அதற்கு ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என வருத்தப்பட்டார் எனக் கூறிய டிடிவி, அவரை காயப்படுத்துவது போல் இதுபோன்று பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
News December 11, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மெசேஜ் வந்துருச்சா..!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு நாளை முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து அவர்களது செல்போன் எண்ணுக்கு அரசு சார்பில் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் மெசேஜ்ஜில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதன்படி, குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு மெசேஜ் வந்துருச்சா?


