News October 17, 2025

தேவர்சோலை: சாலையோரம் பதுங்கி நின்ற யானை!

image

தேவர் சோலை பேரூராட்சி மூன்றாவது மைல், மஞ்சமுலா, பாடந்துறை பகுதிகளில் பல மாதங்களாக யானை ஒன்று சுற்றி வருகிறது. மேலும் நேற்றைய தினம் இரவு மூன்றாவது மைல் பகுதியில் பிரதான சாலை அருகே இந்த ஒற்றை யானை சாலையோரம் உள்ள புதர்களுக்கிடையே மறைந்து இருந்த நிலையில் காணப்பட்டதை கண்ட சாலையில் பயணித்த வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர். மேலும் இந்த யானையை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News December 8, 2025

நீலகிரி: இதை செய்தால் அபராதம்! எச்சரிக்கை

image

நீலகிரி: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மூலம் உணவுப் பொருட்கள் பார்சல் செய்து கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

News December 8, 2025

நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News December 8, 2025

நீலகிரி: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!