News October 17, 2025

வேலூர்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 7, 2025

வேலூர்: HOTEL-ல தரமற்ற உணவா? இந்த நம்பருக்கு கால் அடிங்க!

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!

News December 7, 2025

வேலூர்: தொழிலாளி தற்கொலை – போலீசார் விசாரணை!

image

கே.வி.குப்பம் தாலுகா நீலகண்டபாளையம் கிராமத்தை சேர்ந்த மகாதேவனின் மகன் பெருமாள் (40), கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று வீட்டுக்கு வந்த பெருமாள் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

வேலூரில் 2,350 மாணவர்கள் திறனாய்வு தேர்வு எழுதினர்!

image

வேலூர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வுகள் நேற்று நடந்தது. 11 மையங்களில் நடந்த இந்த தேர்வை எழுத 2,470 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2,350 பேர் எழுதினர். 120 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வையொட்டி முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!