News October 17, 2025
தஞ்சை: சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி பலி

நரசிங்கன்பேட்டையில் இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து திருக்கடையூர் சென்ற கார் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுப்பிரமணியன் இவரது மனைவி கலாவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் திருக்கடையூரில் 60ம் கல்யாணம் நடைபெற இருந்த நிலையில் இருவரும் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News October 18, 2025
தஞ்சை: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

தஞ்சை மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..
News October 18, 2025
தஞ்சை: கஞ்சா வியாபாரி கொலை; அதிரடி தீர்ப்பு!

தஞ்சாவூரில் கடந்த மார்ச் 25, 2023 அன்று கஞ்சா வாங்கச் சென்றபோது, வியாபாரி பிரதீப் தர மறுத்ததால் அவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொலை செய்த விக்னேஷ், சிவகுமார், சூரியா ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News October 18, 2025
தஞ்சை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில், மரம் வெட்டும் கருவிகள், பொக்லின் எந்திரம், பேரிடர் மீட்பு கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை நேற்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டு, 25 பேர் கொண்ட சிறப்பு குழு சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18004251100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.