News October 17, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களும், வடகிழக்கு பருவ மழையையொட்டி அடுத்த மாதத்திற்குரிய நவம்பர் மாத ஒதுக்கீடனா 12 முதல் 35 கிலோ அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும், நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள் வழக்கம் போல தங்களுக்கு உரிய அரிசியினை நவம்பர் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
பெரம்பலூர்: காப்பர் கம்பிகளை திருடிய 5 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் கம்பிகளை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை காரை பிரிவு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 15 கிலோ காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயல்களை விற்றது தெரியவந்துள்ளது.
News November 9, 2025
பெரம்பலூர்: பட்டப் பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (38) தனது வயலில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொழுது, மர்ம நபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார். கூச்சல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் சென்ற செந்தில் என்பவர் மர்மநபரை துரத்தி சென்றதால் மர்மநபர் அச்சமடைந்து நகையை கீழே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


