News April 16, 2024
தண்டனை குறைவாக இருப்பதால் இந்த பழக்கம் குறையவில்லை

தண்டனை குறைவாக இருப்பதால், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பழக்கம் குறையாமல் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும், 2019, 2021ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவான வழக்குகள் எத்தனை? குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? தண்டனை வழங்கப்பட்டவை எத்தனை? என சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது .
Similar News
News November 15, 2025
விஜய்க்கு அரசியல் அட்வைஸ் கொடுத்த ரோஜா

விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், மக்களோடு மக்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை கடைசி 2 மாதங்கள்தான் முக்கியமானது. அப்போது யார் மக்களை கவர்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். பணம் கொடுத்தோ, உண்மை, பொய் என எதையாவது சொல்லியோ மக்களை கவர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
பிஹாரில் CM ஸ்டாலின் பேரணி சென்ற தொகுதியின் ரிசல்ட்

ECI-ன் SIR-ஐ எதிர்த்து பிஹாரின் முசாபர்பூர் தொகுதியில், MGB கூட்டணி கட்சி தலைவர்களுடன் CM ஸ்டாலின் பேரணி சென்றார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பிரசாரமும் செய்தார். அந்த தொகுதியில் பாஜகவின் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகளையும், காங்கிரஸின் பிஜேந்திரா சௌத்ரி 67,820 வாக்குகளை பெற்றுள்ளனர். இறுதியில் 32,657 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
News November 15, 2025
நவம்பர் 15: வரலாற்றில் இன்று

*1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1949 – மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். *2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. *1875 – விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள். *1982 – காந்தியவாதி வினோபா பாவே உயிரிழந்த நாள். *1986 – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள்.


