News October 17, 2025
நாமக்கல்: அலைய வேண்டாம் ‘வாட்ஸ்அப் ஆதார் சேவை’

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News October 27, 2025
நாமக்கல்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

நாமக்கல் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit
News October 26, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.26 நாமக்கல்-( தேசிங்கன் – 8668105073) ,வேலூர் -( ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -( செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 26, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (26.10.2025) இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைகளுக்கு, தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


