News October 17, 2025

IND vs AUS: கேமரூன் கிரீன் விலகல்

image

இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் இருந்து ஆஸி., ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மார்னஸ் லபுஷேன் அணியில் இணைந்துள்ளார். ஆஸி.,ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 ODI, 5 T20 போட்டிகளில் விளையாடுகிறது. ODI, சுப்மன் கில் தலைமையிலும், T20 போட்டியை சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியிலும் இந்தியா விளையாடுகிறது. ரோஹித், கோலி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News October 18, 2025

சற்றுமுன்: விஜய் முக்கிய உத்தரவு

image

கரூர் துயர சம்பவத்தையொட்டி தவெக சார்பில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, மண்டல வாரியாக தவெக ஐ.டி. விங் சார்பில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், கரூர் சம்பவத்தில் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கட்சி சார்பில் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News October 18, 2025

திராவிடத்திற்கு சீமான் சொல்லும் விளக்கம்

image

தமிழர் அல்லாதோர் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஆள்வதற்கும், வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டதே திராவிடம் என்று சீமான் புது விளக்கம் கொடுத்துள்ளார். திராவிட கதைகளை திமுகவினர் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் என்ற அவர், இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, முதலில் திராவிடம் என்றால் என்னவென்று CM ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News October 18, 2025

இந்த அண்ணன மறந்துடாதீங்க..

image

அப்பா வேற வெள்ளனே கறி வாங்கிட்டாரு, அம்மாவும் வடை சுட்டுட்டு, இட்லி அவிக்க ஆரம்பிச்சிட்டாங்க, நான் வேற உடம்பு முழுக்க எண்ணெய் தேய்ச்சிட்டேன், வேகமா சட்டைய கொடுங்க என்று டெய்லர் கடை வாசலில் வாழ்வில் ஒரு முறையாவது நின்றிருப்போம். இன்றோ ரெடிமேட் துணிகளுக்கு 90% பேர் திரும்பிய நிலையில், டெய்லர்களுக்கு கிடைப்பதோ கிழிந்த துணிகளை தைக்கும் வேலை மட்டுமே. கடைசியாக எப்போது சட்டையை தைத்து அணிந்தீர்கள்?

error: Content is protected !!