News October 17, 2025
இந்தியச் சந்தைகள் ஏற்றம்; முதலீட்டாளர்கள் குஷி!

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்து 83,552 புள்ளிகளிலும், நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 25,606 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Asian Paints, Maruti Suzuki, Tata Motors, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
Similar News
News October 18, 2025
பங்கு சந்தையில் AI அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!

AI துறையில் உள்ள நிறுவன பங்குகளின் விலை மிக அதிகமாக ஏறுவதால், உலக பங்கு சந்தையில் விரைவில் ஒரு பெரிய சரிவு வரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில Tech நிறுவன பங்குகள் அதிக மதிப்பில் இருப்பது, சந்தை சில நிறுவனங்களை சார்ந்து இயங்குவது, ஆட்டோமேட்டிக் வர்த்தகம் வணிகத்தை வீழ்ச்சியடைய செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பல துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
News October 18, 2025
சற்றுமுன்: விலை தாறுமாறாக மாறியது

தீபாவளியையொட்டி, கோயம்பேடு, தோவாளை, மாட்டுத்தாவணி உள்ளிட்ட மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ₹2,500, கனகாம்பரம் ₹2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை, காக்கரட்டான் ஆகியவை ₹1,500-க்கும், பிச்சி பூ ₹1,200-க்கும் விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பிறகே விலை சரியும் வணிகர்கள் கூறுகின்றனர். தங்கம் மட்டுமல்ல, பூக்கள் கூட வாங்க முடியாது போலயே..!
News October 18, 2025
இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

தீபாவளியின் தொடக்கத்தை குறிக்கும் தந்தேராஸ் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேத கடவுளான தன்வந்திரியை வழிபடும் இந்நாளில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் வாங்கினால் வீட்டில் செல்வம் தொடர்ந்து பெருகும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, இன்று நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், இரவு 7.28 மணி முதல் 8.38 மணி வரை நகை வாங்குவது சிறப்பாகும். நீங்க எத்தனை சவரன் வாங்க போறீங்க?