News October 17, 2025
நெல்லை: கனமழையால் இடிந்து விழுந்த வீடு

நெல்லை டவுன் சுந்தரர் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா, பரமேஸ்வரன் என 2 மனநிலை பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இவருடைய வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
நெல்லை: தீபாவளி ஒட்டி 1600 போலீசார் பாதுகாப்பு – எஸ்பி

தீபாவளிக்காக ஏஎஸ்பி டிஎஸ்பிக்கள் தலைமையில் 1600 போலீசார் மாவட்டம் முழுவதும் பணியில் உள்ளனர். அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்களில் 24 மணி
நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். 53 இடங்களில் வாகன சோதனைகள் மூலம் சந்தேகமான நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
நெல்லை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News October 18, 2025
நெல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் நெல்லை மாநகரில் பொதுமக்கள் புத்தாடைகள் பட்டாசு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை பகுதியில் ஏராளமான ஜவுளி கடைகள் இருப்பதால் அதிகளவு மக்கள் அங்கு வருகின்றனர். இதன் காரணமாக வண்ணாரப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று இரவு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.