News October 17, 2025
2026 டி20 உலகக் கோப்பை: 20 அணிகள் இவை தான்

Asia-EAP Qualifier tournament-ல் ஜப்பானை வீழ்த்தியதன் மூலம் UAE, 20-வது மற்றும் கடைசி அணியாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, இலங்கை, ஆப்கன், ஆஸி., வங்கதேசம், இங்கி., தெ.ஆப்பிரிக்கா, USA, வெ.இண்டீஸ், அயர்லாந்து, நியூசி., பாக்., கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், UAE ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
Similar News
News January 16, 2026
AR ரஹ்மான் மீண்டும் இந்து மதத்திற்கு மாற வேண்டும்: VHP

வாய்ப்புகளை பெற, மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புங்கள் என AR ரஹ்மானுக்கு VHP தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் அறிவுறுத்தியது சர்ச்சையாகியுள்ளது. வகுப்புவாத சிந்தைகளால் கடந்த 8 ஆண்டுகளாக பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக AR ரகுமான் பேசியிருந்தார். அதற்கு பதிலடியாக, ஒட்டுமொத்த திரையுலகையும் ரஹ்மான் அவதூறு செய்கிறார். இது ஒரு கலைஞருக்கு அழகல்ல என பன்சால் விமர்சித்துள்ளார்.
News January 16, 2026
விடுமுறை.. மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

பொங்கல் விடுமுறை முடிந்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் & பொதுமக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நாளை சென்னைக்கு திரும்புவதற்கு ஏதுவாக 3,507 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. பிற நகரங்களுக்கு 2,060 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. உடனடியாக இங்கே <
News January 16, 2026
இது ரோஹித்துக்கு செய்த அவமரியாதை: மனோஜ் திவாரி

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையிலும், ரோஹித் கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு பின்னணியில் பயிற்சியாளர் கம்பீர் இருந்திருக்கலாம் என்று மனோஜ் திவாரி சந்தேகம் தெரிவித்துள்ளார். ரோஹித் போன்ற ஒரு ஜாம்பவானை ஓரங்கட்டுவது விளையாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் ODI கேப்டன்சியில் இருந்து நீக்கியது ரோஹித்துக்கு செய்த அவமரியாதை என்றும் கடுமையாக விமர்சித்தார்.


