News October 17, 2025
கைது செய்யப்பட்ட 2-வது நாளே சிறையில் மர்ம மரணம்!

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் உயிரிழந்தார். இவர், கடந்த 2012-ல் மதுரை திமுக பிரமுகர் கதிரவனை கடத்தி பணம் பறித்த வழக்கில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2-வது நாளே உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் சிறைச்சாலை பகுதியில் பதற்றமாக சூழல் நிலவுகிறது.
Similar News
News October 18, 2025
பிஹார் பின்தங்கியது எப்படி?

Economists பார்வையில் *4 பக்கமும் நிலத்தால் சூழப்பட்டதால் வர்த்தகம் வளரவில்லை *நீர்வளம் இருந்தும் பசுமை புரட்சியை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க தவறியது *Freight Equalisation policy: பிஹாரின் அரிய Raw material-களை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல ம. அரசு உதவியதால், அங்கு Industries வளரவில்லை *நிதி தொகுப்புகளை பயன்படுத்த கட்டமைப்பு இல்லாததால், அவை வீணாகி மீண்டும் Central-க்கே திரும்புகின்றன.
News October 18, 2025
School Fees-க்கு காசு இல்லையா? இதோ Scholarship!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12-ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை கொடுக்கிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற, https://scholarships.gov.in/ – ல் அக்.31-க்குள் அப்ளை பண்ணுங்கள். SHARE.
News October 18, 2025
‘யுத்த நாயகன்’ காலமானார்

நாட்டுக்காக 3 போர்களில் பங்கேற்று ‘War Hero’என புகழ்பெற்ற கரோடி திம்மப்பா ஆல்வா(85) காலமானார். மங்களூருவில் பிறந்த இவர், 1971 போரின்போது, தாக்குதலுக்கு ஆளாகி சிட்டகாங் வனப்பகுதியில் உயிருக்கு போராடி மீண்டு வந்தார். தனது போர் அனுபவங்களை ‘Garodi Maneyinda Sena Garadige’ புத்தகமாக எழுதியுள்ளார். மக்கள் சேவையில் ஆர்வம் கொண்ட அவர் தனது உடலையும், KS ஹெக்டே மருத்துவ அகாடமிக்கு தானம் செய்துள்ளார். #RIP