News October 17, 2025
ஓமலூரில் சிறுவனை மலம் அள்ள வைத்த கொடூரம்!

சேலம்: ஓமலூர் அருகே உள்ள கொங்குபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவரது மகன் பவித்ரன் (15) அருகே உள்ள தோட்டத்தில், மலம் கழித்து விட்டாதாக கூறப்படுகிறது. இதனை கண்ட தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரமேஷ் (51) என்பவர் சிறுவனை மலம் அள்ள வைத்தாக தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்ட போலீசார் போலீசார், வன்கொடுமை சட்டத்தில் ரமேஷை கைது செய்தனர்.
Similar News
News December 7, 2025
சேலம்: திருமண வாழ்வில் சோகம்!

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகையன். இவருடைய மனைவி காந்திமதி (28), நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார், காந்திமதியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் காந்திமதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 7, 2025
சேலம் வருகிறார் விஜய்? தவெக மாஸ்டர் பிளான்!

வரும் டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அதை முடித்தவுடன் சேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தகவல். விரைவில் தேதியை குறிப்பிட்டு போலீசாரிடம் அனுமதி கடிதம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
News December 7, 2025
சேலம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


