News October 17, 2025
மதுரை அருகே மழையால் விபத்து- பறிபோன உயிர்

மதுரை அச்சம்பத்து வ.உ.சி.,தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகமுத்து (22). இவர் டூவீலர் கன்சல்டிங் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வாடிப்பட்டிக்கு விற்பனைக்கான டூவீலரில் சென்று திரும்பினார். சமயநல்லுார் அருகே கட்டப்புளி நகர் நான்கு வழிச்சாலையில் மழையால் நிலை தடுமாறிய டூவீலர் சென்டர் மோதி விழுந்ததில் இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 7, 2025
மதுரையில் ரூ.36,680 கோடி முதலீடு: 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு

மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,680 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
News December 7, 2025
மதுரை: ஆதார் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு

மதுரை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
மேலூர் அருகே 34 பேர் கைது

ஒத்தக்கடை எஸ்ஐ ஜெயம் பாண்டியன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மதுரை மேலூர் சாலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக சிலர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். குருசாமி(69) சிவ காமு(68), பிரகாஷ்(38) உட்பட 34 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை விடுவித்தனர்.


