News October 17, 2025

சாதித்து காட்டிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை!

image

பீகார் மாநிலத்தை சேர்ந்த 28 வயது கூலித் தொழிலாளி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த செப்.26-ல் பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கி அவருக்கு கை சிதைந்தது. இந்த நிலையில், இழந்த ஒரு கையை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டுக்கொடுத்துள்ளனர். இந்த சிகிச்சை இந்தியாவிலேயே இங்குதான் முதல் முறை நடைபெறுகிறது.

Similar News

News October 18, 2025

சென்னை: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்க் <<>>மூலம் வரும் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். *டிகிரி முடித்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க*

News October 18, 2025

சென்னை மக்களே உஷாரா இருங்க

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்களை நம்பி ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். ஒருவேளை தவறி ஏமாற்றப்பட்டால் பயப்பட வேண்டாம். 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம். *தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News October 18, 2025

2 நாளில் 3.59 லட்சம் பேர் பயணம்!

image

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் தீபாவளிப் பண்டிகை முன்னெச்சரிக்கை செயல்பாட்டில், 16-17 அக்டோபர் 2025க்குள் இயக்கப்பட்ட 6,920 பேருந்துகளில் சுமார் 3,59,840 பயணிகள் பயணம் செய்தனர். இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்.

error: Content is protected !!