News October 17, 2025
நாகை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ், மூன்று தவணையாக தலா ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறுவதற்கு வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
ரூ.1.5 லட்சம் பரிசு: நாகை கலெக்டர் அறிவிப்பு

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
நாகை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நாகை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
நாகை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <


