News October 17, 2025
அரியலூர்: தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 24-ம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். SHARE IT NOW…
Similar News
News October 18, 2025
அரியலூரில் இடைவிடா மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (அக்.17) முற்பகல் தொடங்கி இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வடிகால் இல்லாமல் மழைநீர் தேங்கி, சாலைகளில் கழிவுநீர் கலந்தது. மேலும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை மற்றும் தீபாவளி வியாபாரிகள் சிரமம் ஆகியவை ஏற்பட்டன. இது ஒருப்பக்கம் இருக்க மாவட்டம் முழுவதும் குளிர்ந்த வானிலை ஏற்பட்டுள்ளது.
News October 18, 2025
அரியலூர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News October 18, 2025
அரியலூர்: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.