News October 17, 2025
PoK உருவாவதற்கு நேருவே காரணம்: ஜிதேந்திர சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உருவாவதற்கு வழிவகுத்த போர் நிறுத்தத்திற்கு நேருவே காரணம் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை அளித்திருந்தால், பாக்., – காஷ்மீர் பிரச்னையே எழுந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும் என்றும் கூறினார்.
Similar News
News October 18, 2025
இதுதான் இந்தியாவின் பிளேயிங் XI?

நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ODI-ல் களமிறங்கவுள்ள இந்திய பிளேயிங் XI-ஐ முன்னாள் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்திய அணி: கில் (கேப்டன்), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ். இந்த டீம் பந்தயம் அடிக்குமா? நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-ஐ கமெண்ட் பண்ணுங்க.
News October 18, 2025
அதிமுக உடன் கூட்டணி கிடையாது

EPS-ஐ முதலமைச்சர் ஆக்குவோம் என்ற நயினாரின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்று TTV தெரிவித்துள்ளார். அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமில்லாமல், வரும் தேர்தலில் வெற்றிக் கூட்டணியாகவும் அமையும் என்றார். மேலும், ஜெ.,வின் உண்மையான தொண்டர்கள் எல்லோரும் இணைந்து EPS-ஐ வீழ்த்துவோம் என கூறினார். இதன்மூலம், NDA கூட்டணியில் அமமுக இடம்பெறாது என்பதையும் உறுதி செய்துள்ளார்.
News October 18, 2025
மலையாள படத்தின் ரீமேக்கா ‘ஜனநாயகன்’?

பாலய்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ‘ஜனாதிபதியம்’ என்ற மலையாள படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியான விஜய், சந்தர்ப்ப சூழலால் அரசியலுக்கு சென்று, CM ஆவதுதான் கதை என்கிறார்கள். எது எப்படியோ, விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு ஹெவியாக இருக்கிறது.