News October 17, 2025
தீபாவளி ரேஸில் சோலோவாக ஆதிக்கம் செலுத்திய விஜய்

2002 மற்றும் 2003-ல் தீபாவளிக்கு அஜித்துடன் விஜய் படங்கள் அடுத்தடுத்து மோதின. ஆனால் அடுத்து விஜய்யின் படங்கள் மட்டுமே அதிகமாக தீபாவளியை அலங்கரிந்தன. அழகிய தமிழ் மகன்(2007), வேலாயுதம்(2011), துப்பாக்கி(2012), கத்தி(2014), மெர்சல்(2017), சர்க்கார்(2018), பிகில்(2019), லியோ(2023) என அடுத்தடுத்து வந்தன. ஆனால் இனி விஜய் படம் தீபாவளிக்கு வருவதை 2026 தேர்தலே முடிவு செய்யும். உங்களுக்கு பிடித்த படம் எது?
Similar News
News October 17, 2025
தீபாவளி ஸ்பெஷல்; ஒரு ஸ்வீட் டப்பாவின் விலை ₹1.11 லட்சமா?

இந்த தீபாவளியில் இந்த ஸ்வீட்கள்தான் கவனிக்க வைத்துள்ளன. ஜெய்ப்பூரில் Swarn Prasadam என்ற ஸ்வீட், ஒரு கிலோ விலை ₹1.11 லட்சமாம். சாதாரண ஸ்வீட் போலில்லாமல், இதில் உண்ணக்கூடிய தங்கம் சேர்க்கப்பட்டு, ஸ்வீட் டப்பாவையும் தங்க நகை பெட்டி போல ரெடி செய்துள்ளனர். இத்துடன், Swarn Bhasma Bharat(₹85,000/kg), Chandi Bhasma Bharat (₹58,000/kg) என்ற ஸ்வீட்களும் மார்க்கெட்டில் இறங்கியுள்ளன.
News October 17, 2025
சாதி படுகொலைகளை தடுக்க தனி ஆணையம்: CM ஸ்டாலின்

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி KN.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த ஆணையம் தரும் அறிக்கையின் படி தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றும் என அவர் உறுதியளித்துள்ளார். சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என திக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 17, 2025
தீபாவளி தித்திக்கிறதா? திக்கு முக்காட வைக்கிறதா?

ஒரு குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்து கொள்வோம். புத்தாடை – ₹4,000 (தலைக்கு ₹1,000), வெடி – ₹2,500, இறைச்சி – ₹1,500, இதர செலவுகள் – ₹2,000 என மொத்தம் ₹10,000 ஆகிறது. வெளியூரில் இருந்து சொந்த ஊர் சென்றால் கூடுதலாக ₹5,000 ஆகும். வருடத்தில் ஒரு நாள் தானே தீபாவளி என்கிறது ஒரு மனம், ஒரு நாளுக்காக இவ்வளவு செலவா என்கிறது ஒரு மனம் என பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன? தீபாவளி பட்ஜெட் எவ்வளவு?