News October 17, 2025
நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை இரவு ரோந்து விவரங்கள்

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , உதகை ஊரகம் உட்கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று இரவு காவல்துறை ரோந்து மேற்கொள்ளப்படுகிறது . அதில் இடம்பெற்றுள்ள DSP , ஆய்வாளர்கள் , சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் மொபைல் எண்கள் இடம் பெற்றுள்ளது . மேலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவிக்கு 100 அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
நீலகிரி: கல்விக்காக ஓர் முன்னேற்றம் – 116 பேர் பயன்!

நீலகிரி பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நீலகிரியில் உள்ள கார்குடி, பொக்காபுரம், குஞ்சப்பனை உள்ளிட்ட மூன்று பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்காக, 3 சிறிய ரக வாகனங்களும் வழங்கப்பட்டது. குஞ்சப்பனை பள்ளிக்கு 25 மாணவர்களும், பொக்காபுரம் பள்ளிக்கு 27 மாணவர்களும், கார்குடி பள்ளிக்கு 64 மாணவர்களும், என மொத்தம் 116 மாணவர்கள் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
News October 17, 2025
நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை பெறலாம்.
News October 17, 2025
நீலகிரி: நாளை மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

ஊட்டி மலர் பெட்டு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஊட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஊட்டி நகரம் பிங்கர் போஸ்ட் காந்தல் தமிழகம்,கேத்தி,இத்தலார் ஆகிய பகுதிகளிலும், மலர் பெட்டு துணை மின் நிலையத்திற்குட்பட்ட தேனாடுகம்பை ஆடாசோலை, கடநாடு எப்பநாடு,மரகள் கோழிப்பண்ணை, உள்ளத்தி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.