News October 17, 2025
குச்சனூரில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

தேனி அருகே உள்ள குச்சனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற அக்.18ம் தேதி முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தவறாமல் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 8.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 8, 2025
தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 8, 2025
தேனி: டீ குடித்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

கம்பம் பகுதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா (21). இவர் அவரது தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.7) ரபீக் ராஜா டீ குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.


