News October 16, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில் , சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் நாளை அக்டோபர் -17, (வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மழை, இடி, மின்னல் நேரத்தில் மரத்தடியில் நிற்காமலும், பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News October 17, 2025
கண்மாயில் மீன் குத்தகை எடுக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர், பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை 9790656919, 9384824553 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு விற்பனை

சிவகங்கை மாவட்ட பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு மற்றும் மிர்கால் மீன்விரலிகள் கையிருப்பில் உள்ளன. மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய் குத்தகையாளர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இவற்றை வாங்கலாம். தொடர்புக்கு: மீன்வள ஆய்வாளர் – 9384824553, மீன்வள மேற்பார்வையாளர் தரம் II – 9790656919. மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் அளித்துள்ளார்.
News October 17, 2025
ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடை

தீபாவளி விடுமுறைக்காக ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் போது பட்டாசுகள், வெடி பொருட்கள், மண்ணெண்ணெய், சிலிண்டர் போன்ற தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ரயில்வே காவல் படை மோப்ப நாய்களுடன் சோதனை நடத்துகின்றனர்.