News October 16, 2025
இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கேயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 16.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.
Similar News
News October 21, 2025
திருப்பூர்: டெலிகாம் நிறுவனத்தில் வேலை!

திருப்பூரில் வேலை தடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Broadband technician’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 56 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் பங்கேற்றால் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிக்க<
News October 21, 2025
உடுமலை: ஆற்றில் சிக்கி ஒருவர் பலி!

திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி அருகே ஆற்றில் வெள்ளப் பெறுக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மாரியப்பன்(40), மது(36) ஆகியோர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் ஆற்றைக் கடக்க முயன்ற போது பரிசல் கவிந்து, மரியப்பன் அடித்து செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று(அக்.20) மாரியப்பனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
News October 21, 2025
திருப்பூரில் பட்டாசு வெடிக்காத கிராமம்!

திருப்பூர்: கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ளது நஞ்சராயன் நகர் பகுதி. இப்பகுதி மக்கள் கூறுகையில், ’பறவைகள் நலன் கருதி நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை. எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களும் இதை ஏற்றுக் கொண்டனர். பண்டிகை கொண்டாட்டம் எங்களுக்கு பட்டாசு இல்லாமல் தான் எப்போதும் உள்ளது’ என்றனர்.