News October 16, 2025
அருப்புக்கோட்டையில் காய்ச்சல் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று அருப்புக்கோட்டை காரையான்பட்டி தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
Similar News
News October 17, 2025
விருதுநகர்: பெற்றோர்களே குழந்தைகளை கவனியுங்க…

குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பட்டாசு வெடிக்கையில் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அருகில் பாத்திரத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். காட்டன் ஆடைகளை உடுத்த வேண்டும். மின் கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது. காயம் ஏற்பட்டால் அந்த இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
News October 17, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனையின் பெருமிதம்..

விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் த.ஜெயசிங் பல்வேறு தகவலை தெரிவித்துள்ளார். அதில், 3 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதில் மாநில அளவில் 3வது இடம் பெற்றுள்ளது. பாதம் பாதுகாப்போம், படுக்கைப்புண் பாதுகாப்பு, போதை மறுவாழ்வு மையம், மார்பக, வாய், கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்டுகின்றன.
News October 17, 2025
விருதுநகர்: அரசு திட்டங்கள் கிடைக்கலையா? இத பண்ணுங்க!

விருதுநகர் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரலையா? கவலை வேண்டாம். தமிழக அரசு ‘நீங்கள் நலமா?’ என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <