News October 16, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பின்படி, தீபாவளி நாளில் காலை 6–7 மணி மற்றும் இரவு 7–8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி. அதிக ஒலி மற்றும் தொடர்ச்சியான சரவெடிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் கரூரில் விசாரணை

image

கரூர் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் விசாரணை நடத்த கரூர் வந்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ளனர். பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ்குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

News October 17, 2025

கரூர் : புதுமை தொழில் தொடங்க 10 லட்சம் மானியம்

image

கரூர் மாவட்டத்தில் Agri Start-up திட்டத்தின் கீழ் புதுமை தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் தொழிலை விரிவுபடுத்த விரும்புவோர் ரூ.10 முதல் ரூ.25 இலட்சம் வரை மானியமாக பெறலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டு, தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

News October 17, 2025

கரூர்: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

image

கரூர் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை (அக்.18) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!