News October 16, 2025

சென்னை: ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 17, 2025

சென்னை: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <>விண்ணப்பிக்கலாம்<<>>. விண்ணப்பிக்க அக்-18 கடைசித் தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. ஷேர் பண்ணுங்க!

News October 17, 2025

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

image

சென்னையில் உள்ள பலரும் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் செல்லக்கூடிய பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால், புகார் செய்ய வேண்டிய எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை (ஆணையர்) – 1800 425161, சென்னை வடக்கு (இணை ஆணையர்)–9789369634, சென்னை (தெற்கு)–9361341926. ஷேர் பண்ணுங்க!

News October 17, 2025

சென்னை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

சென்னை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!