News October 16, 2025

குமரி உட்பட தமிழகத்தில் எங்கும் அனுமதி கிடையாது

image

குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் இன்றைய சட்டப்பேரவையில் குமரி மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டும் என கூறினார். குமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை என தமிழகத்தில் எந்த வகையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன். மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்காமல் இதை நிறைவேற்றுவோம் என கூறுகிறது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

குமரி: பட்டாசுகளுக்கு வரைமுறை – ஆட்சியர்

image

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: தீபாவளி பண்டிகையையொட்டி அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைபகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

News October 16, 2025

BREAKING குமரிக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

குமரி: லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

குமரி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!